புதுச்சேரி

கோப்பு படம்.

பாண்லேவை காப்பாற்ற சங்க தேர்தலை நடத்த வேண்டும்-தி.மு.க. வலியுறுத்தல்

Published On 2022-12-17 14:41 IST   |   Update On 2022-12-17 14:41:00 IST
  • புதுவையில் இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவு பா.ஜனதா- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமர்ந்தது முதல் பால் தட்டுப்பாடு தொடர்ந்து இருந்து வருகின்றது.
  • பாண்லே பாலின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து, தனியார் நிறுவன பாலை வாங்கி பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவு பா.ஜனதா- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமர்ந்தது முதல் பால் தட்டுப்பாடு தொடர்ந்து இருந்து வருகின்றது.

இதை சீரமைக்க வேண்டிய முதல்- அமைச்சர், செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் எந்தவிதமான உறுதியான நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. இதனால் தற்போதும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மது விற்பனைக்கு தரும் முக்கியத்துவத்தை அரசு பால் விற்பனைக்கு தராமல் உள்ளது. இதனால் விற்பனை தொடர்ந்து சரிந்து. பாண்லே பாலின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து, தனியார் நிறுவன பாலை வாங்கி பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். இது நீடித்தால் பாண்லே நிறுவனம் மூடும் நிலைக்கு சென்றுவிடும்.

தொடர்ந்து பாண்லே நிர்வாகம் தள்ளாடி வருவதால் ஊழியர்கள் பாப்ஸ்கோ, பாசிக் போன்ற பாண்லேவிலும் சம்பளம் கிடைக்காத நிலை ஏற்படுமோ என்ற அச்சம் கொண்டு வருகின்றனர். பாண்லே பால் வழங்காததால், அதனை விற்பனை செய்து வரும் முகவர்களும் வருமானத்தை இழந்து பாதிக்கப்பட்டு ள்ளனர்.

எனவே சீரழிவுப்பாதைக்கு சென்று கெண்டிருக்கும் பாண்லேவை அரசு காப்பாற்ற வேண்டும். கூட்டுறவு நிறுவனமான பாண்லேவை அரசு அதிகாரி கள் நிர்வாகம் செய்வதால் உரிய கவனமின்றி உள்ளனர். அதாவது பாண்லே இல்லை யென்றால் வேறு இடத்தில் பணியாற்றி, நாம் சம்பளம் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் உள்ளனர். அவர்களுக்கு பாண்லேவை மேம்படுத்தும் நோக்கம் இல்லை.

அதுவே அங்கு கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தி தேர்வானவர்களைக் கொண்டு இயங்க செய்தால், அவர்களுக்கு நமது நிறுவனம், நல்ல லாபத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இதனால் நிர்வாகம் சிறப்பாக செயல்படும். எனவே பாண்லே நிர்வாகத்திற்கு உடனடியாக கூட்டுறவு சங்க தேர்தலையும் அரசு நடத்த வேண்டும்.

இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News