புதுச்சேரி

கோப்பு படம்

கட்டிட தொழிலாளி வீட்டில் நகை- பணம் கொள்ளை

Published On 2023-05-24 13:54 IST   |   Update On 2023-05-24 13:54:00 IST
  • காட்டேரிக்குப்பம் புது நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சாம்பசிவம் கட்டிட தொழிலாளி.
  • இவர் காலை கட்டிட கூலி வேலைக்கு சென்று விட்டார்.

புதுச்சேரி:

காட்டேரிக்குப்பம் புது நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சாம்பசிவம் கட்டிட தொழிலாளி.

இவர் காலை கட்டிட கூலி வேலைக்கு சென்று விட்டார். இவரது குடும்பத்தினர்  மதியம் 1 மணியளவில் வீட்டை பூட்டி சாவியை ஒரு மறைவிடத்தில் வைத்துவிட்டு அந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றனர்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் யாரோ வீட்டில் உள்ள பீரோவை திறந்து அதில் இருந்த தங்கக் காசுகள், வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் ரூ.22,600 ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டின் பூட்டை உடைக்காமல் மறைவிடத்தில் இருந்த சாவியை எடுத்து மர்ம நபர்கள் திருடி சென்றி ருப்பதால் இவர்களது குடும்பத்திற்கு அறிமுகமான நபர்களோ அல்லது உள்ளூர் நபர்களோ இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என காட்டேரிக் குப்பம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

விரைவில் குற்றவாளிகளை கைது செய்துவிடுவோம் என காட்டேரிக்குப்பம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா கூறினார்.

Tags:    

Similar News