புதுச்சேரி

ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்ற காட்சி.

ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்

Published On 2023-05-13 13:37 IST   |   Update On 2023-05-13 13:37:00 IST
  • மாணவர்களை தேர்வு செய்து விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
  • தொழில்நுட்ப சிம்போசியம் என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது.

புதுச்சேரி:

 கிருமாம்பாக்கம் ராஜீவ்காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி துறை சார்பாக சாரியஸ் 2023 என்ற தலைப்பில் தொழில்நுட்ப சிம்போசியம் என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் விஜயகிருஷ்ண ரபாகா தலைமை தாங்கினார்.

துணை முதல்வர் ஐயப்பன் சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப துறையின் தலைவர் வினோத்குமார் வரவேற்றார்.

கருத்தரங்கில் மாணவர்களின் தனித்தி றமையை வெளிப்படுத்தவும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான வழிமுறை களை செயல்படுத்தவும் ஆலோ சனைகளை மாணவர்க ளுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாணவர் களை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த மாணவர்களை தேர்வு செய்து விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பேராசிரியர்கள் வீராண்டீஸ்வரி புவனேஸ்வரி, மஞ்சுளா, இந்துமதி, ஆதித்யன் மற்றும் லட்சுமிபிரியா செய்து இருந்தனர்.

இதில் பல்வேறு துறையின் தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தொழில்நுட்ப துறையின் பேராசிரியை மாலதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News