புதுச்சேரி
விடுதியில் 20 பெண்களை மது குடிக்க வைத்து நடனம்- ராஜஸ்தான் வாலிபர் கைது
- வெளிமாநில ஆண்களும்-பெண்களும் குடித்துவிட்டு நடனம் ஆடுவதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.
- மது விருந்துக்கு பயன்படுத்திய மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை அடுத்து தமிழக பகுதியான ஆரோவில் அருகே இடையஞ்சாவடி கிராமத்தில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு செல்லும் குதிரை பண்ணை சாலையில் தனியார் விடுதி உள்ளது.
அங்கு வெளிமாநில ஆண்களும்-பெண்களும் குடித்துவிட்டு நடனம் ஆடுவதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி விடுதி உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு சுமார் 20 பெண்கள் மதுபோதையில் நடனமாடிக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு மது ஊற்றி கொடுத்து நடனமாட வைத்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ்பிரபாஜ் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மது விருந்துக்கு பயன்படுத்திய மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.