ஆலோசனைக்கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
புதுவை தமிழ்சங்க தேர்தல் வேட்புமனு தாக்கல்
- இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
- 19-ந் தேதி மனுக்களை திரும்பப்பெறுதல், ஆய்வு செய்தல், 21-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை தமிழ்ச் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. சங்க தலைவர் முத்து தலைமை வகித்தார்.
தேர்தல் ஆணையர் பிரபாகரன், துணை தலைவர் ஆதிகேசவன், பாலசுப்பிரமணியன், செயலாளர் சீனு மோகன்தாசு, சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின் தமிழ்ச்சங்க தலைவர் முத்து நிருபர்களிடம் கூறியதாவது:-
2023 முதல் 3 ஆண்டு தமிழ்ச்சங்க ஆட்சிக் குழுவின் 11 உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் வரும் 28-ந் தேதி நடக்கிறது. வரும் 14-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
15-ந் தேதி வேட்புமனு வழங்கப்படுகிறது. 17-ந் தேதி வேட்பாளர் விண்ணப்பம் தாக்கல்,
19-ந் தேதி மனுக்களை திரும்பப்பெறுதல், ஆய்வு செய்தல், 21-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 28-ந் தேதி நடக்கிறது. அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.