புதுச்சேரி
பொதுப்பணித்துறை கலந்தாய்வு கூட்டம் ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற காட்சி.
பொதுப்பணித்துறை கலந்தாய்வு கூட்டம்
- ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. ஆய்வு
- அதிகாரிகளைக் கொண்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் உள்ள கொறடா அலுவலகத்தில் புதுவை அரசு கொறடாவும் இந்திரா நகர் தொகுதி ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ. தலைமையில் இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் பயன்பாட்டிற்கு மின்துறை, கழிவு நீர் கால்வாய், புதிய மின் இணைப்பு, புதிய குடிநீர் குழாய் அமைத்தல், புதிய சாலை அமைத்தல், பொதுப்பணித்துறை, ஆகிய துறைகளின் அதிகாரிகளைக் கொண்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட சாணார்பேட்டை ஞானதி யாகுநகர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 2023-2024 ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது. உடன் துறை இயக்குனர் மற்றும் திட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.