புதுச்சேரி

போக்குவரத்து ஆணையரை எதிர்கட்சிதலைவர் சிவா எம்.எல்.ஏ. சந்தித்து மனு அளித்த காட்சி.

பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்-தி.மு.க. வலியுறுத்தல்

Published On 2023-02-15 14:41 IST   |   Update On 2023-02-15 14:41:00 IST
  • புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 12 ஒப்பந்த ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கி, அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
  • புதிய பேருந்துகளை வழித்தடத்தில் இயக்கி போக்குவரத்துக் கழகம் வளச்சியடைய வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

புதுச்சேரி:

புதுவை தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா போக்குவரத்து ஆணையர் சிவக்குமாரை சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில், புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 12 ஒப்பந்த ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கி, அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள 3 மாத ஊதியம் மற்றும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட டி.ஏ.வை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட எம்.ஏ.சி.பி. மற்றும் 7 -வது ஊதியக்குழுவை அமுல்படுத்த வேண்டும்.

3 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட போனசை உடனே வழங்க வேண்டும். புதிய பேருந்துகளை வழித்தடத்தில் இயக்கி போக்குவரத்துக் கழகம் வளச்சியடைய வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட மேலாண் இயக்குனர் துறை செயலரிடம் கலந்தாலோ சித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின்போது தொ.மு.ச, பா.ஜனதா மஸ்தூர், ஐ.என்.டி.யூ.சி., விடுதலை சிறுத்தைகள் கட்சி, அரசு ஊழியர்கள் சம்மேளனம், மத்திய கூட்டமைப்பு, அண்ணா தொழிற்சங்கம், பி.ஆர்.டி.சி. ஓட்டுனர்-நடத்துனர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News