புதுச்சேரி

பொதுப்பணிதுறையை முற்றுகையிட்டு போராட்டம் நடந்த காட்சி.

பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Published On 2023-05-09 14:31 IST   |   Update On 2023-05-09 14:31:00 IST
  • தமிழ் தேசிய முன்னணி தமிழ்மணி உட்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
  • போராட்டம் நடத்தியவர்கள் பொதுப்ப ணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

புதுச்சேரி:

புதுவை பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு திராவிடர் விடுதலை கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்துக்கு திராவிடர் விடுதலை கழகம் லோகு அய்யப்பன் தலைமை வகித்தார். மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர்செல்வன், திராவிடர் கழகம் சிவவீரமணி, மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், தமிழர் களம் அழகர், அம்பேத்கர் தொ ண்டர்படை பாவாடை ராயன், சிந்தனையாளர் இயக்கம் தீனா, மனித உரிமைகள் அமைப்பு முருகானந்தம், தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர், ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் கட்சி அறிவுமணி, இளைஞர் முன்னணி கலைபிரியன், பீ போல்ட் பசீர்அகமது, தமிழ் தேசிய முன்னணி தமிழ்மணி உட்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பொதுப்பணித்துறையில் வேண்டியவர்களுக்கு மட்டும் ஒப்பந்தம் அளிப்பதை கண்டித்தும், பாதாளசாக்கடை அடைப்பு நீக்கும் பணியை குறிப்பிட்ட நபர்களுக்கு டெண்டர் விடுவதை கண்டித்தும், முறைகேடுகளை கண்டு கொள்ளாத பொது ப்பணித்துறை அமைச்சரை கண்டித்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டம் நடத்தியவர்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக போலீஸ்காரர் ஒருவர் மரியாதைக்குரியதாக பேசியதாக கூறி போலீ சாருடன், போராட்ட க்காரர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News