மாணவ-மாணவிகளுக்கு தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபால் புத்தகபை பரிசாக வழங்கிய காட்சி.
எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
- தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபால் வழங்கினார்
- மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் பொதுக்குழு உறுப்பினர் கோபால் ஏற்பாட்டில்
எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
கடந்த ஜூலை 23-ந் தேதி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஒத்தவாடை வீதியில் பரிசு தொகையை வழங்கி தொடங்கி வைத்தார்.தொடர்ந்து தொகுதி முழுவதும் 500–-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு வீடு, வீடாக சென்று பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், விடுபட்ட மாணவர்களுக்கு தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு உறுப்பினர் கோபால் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாநில மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், தொகுதி பொருளாளர் சசிகுமார், கிளைச் செயலாளர் விஜயகுமார், வெங்கட், பில்லா, வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.