புதுச்சேரி
கோப்பு படம்.
மின்துறை தனியார்மய டெண்டர் 11-வது முறையாக நீட்டிப்பு
- புதுவை மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- கடந்த ஆண்டு செப்டம்பரில் டெண்டர் வெளியிடப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் டெண்டர் வெளியிடப்பட்டது.
இதை கண்டித்து மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் தனியார்மய எதிர்ப்பு போரா ட்டக்குழுவை உருவாக்கி வேலைநிறுத்தம் செய்தனர். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடந்தது. போராட்டத்தை கைவிட்ட ஊழியர்கள், தனியார்மயத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் மின்துறை செயலர் ஒவ்வொரு மாதமும் டெண்டர் இறுதி செய்யும் தேதியை தொடர்ந்து நீட்டித்து வருகிறார்.
11-வது முறையாக மின்துறை டெண்டர் நீட்டிக்கப்பட்டுள்ளது.