புதுச்சேரி

கண்காட்சியை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்து அங்கு இடம் பெற்ற அரங்கை பார்வையிட்டார்.

காமராஜர் மணி மண்டபத்தில் மின்சக்தி கண்காட்சி- அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்

Published On 2022-07-28 14:24 IST   |   Update On 2022-07-28 14:24:00 IST
  • நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதுவை மின்துறை, பவர்கிரிட் இந்தியா, புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை இணைந்து பாரதத்தின் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி 2047 என்ற திருவிழாவை காமராஜர் மணிமண்டபத்தில் நடத்துகிறது.
  • திருவிழா தொடங்கி வருகிறள 30-ந் தேதி வரை நடக்கிறது.

புதுச்சேரி:

நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதுவை மின்துறை, பவர்கிரிட் இந்தியா, புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை இணைந்து பாரதத்தின் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி 2047 என்ற திருவிழாவை காமராஜர் மணிமண்டபத்தில் நடத்துகிறது.

இந்த திருவிழா தொடங்கி வருகிறள 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த திருவிழாவை அமைச்சர் நமச்சிவாயம் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அரசு சார்பிலும், பிற அமைப்புகள் சார்பிலும் அமைககப்பட்டுள்ள அரங்கு களை பார்வையிட்டார்.

அரங்குகளில் 75 ஆண்டுகால மின் வளர்ச்சி, 2047-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டிய இலக்கு, திட்டங்கள், சூரிய ஒளி மின்கலம் அமைக்க வழங்கப்படும் மானியம், இதைப்பெறும் வழிமுறைகள், மின் நுகர்வோர் உரிமைகள், சட்டம் குறித்து ஒலி, காணொலி காட்சிகளும் நடத்தப்படுகிறது.

30-ந் தேதி நிறைவு விழாவில் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்ற உள்ளார். இந்த அரங்குகளை பொதுமக்கள் 30-ந் தேதி வரை காலை 9.30 மணியிலிருந்து இரவு 8 மணி வரை காணலாம்.

Tags:    

Similar News