புதுச்சேரி

கோப்பு படம்

சுற்றுலா பயணிகளை குறிவைத்து போலீசார் அபராதம் வசூல்- நேரு எம்.எல்.ஏ. புகார்

Published On 2023-03-18 05:14 GMT   |   Update On 2023-03-18 05:14 GMT
  • விவசாயத்திற்கு தேவையான நவீன எந்திரங்களை அரசு மானியமாக வழங்க வேண்டும்.
  • அரசு பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பேசியதாவது:-

விவசாயத்தை பொருத்த வரை விளைநிலங்கள் அதிகளவு மனைகளாக மாறிவிட்டது. இருக்கும் விளைநிலங்களை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்திற்கு தேவையான நவீன எந்திரங்களை அரசு மானியமாக வழங்க வேண்டும்.

அரசு மானியத்தில் வழங்கப்படும் பசுக்கள் மூலம் பெறப்படும் பாலை பயனாளிகள் பாண்லேவுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரேஷன் கடைகளை திறந்து அரிசி மற்றும் உணவு பொருட்களை வழங்க வேண்டும். இதன் மூலம் ஆண்டு கணக்கில் சம்பளம் இல்லாமல் பணியில் இருக்கும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாத சம்பளம் கிடைக்கும்.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு என்று ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

போக்குவரத்து காவலர்கள் சுற்றுலா பயணிகளிடம் கறாராக நடந்து கொள்கிறார்கள். சுற்றுலா பயணிகள் பயன்ப டுத்தும் வாகனங்களை குறி வைத்து அபராதம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும். திட்டங்களை காலத்தோடு நிறைவேற்ற அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுத்து மாநிலத்தை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News