புதுச்சேரி

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்த காட்சி.

1.68 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2023-09-18 10:44 IST   |   Update On 2023-09-18 10:44:00 IST
  • 4042 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 1,68,239 மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட உள்ளது.
  • ஊர் பொதுமக்கள் மற்றும் புதுவை களப் பணியாளர் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

புதுச்சேரி:

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரம் தங்கசாமி நினைவு நாளையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள 100 விவசாய நிலங்களில், 4042 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 1,68,239 மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட உள்ளது.

அதன்படி புதுவை மண்ணாடிப்பட்டு கொம்யூன், கலிதீர்த்தான்குப்பம் கிராமத்தில் நாகலிங்கம் என்பவரின் சொந்தமான நிலத்தில் சுமார் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் புதுவை களப் பணியாளர் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். 

Tags:    

Similar News