புதுச்சேரி

கோப்பு படம்.

நில மோசடிக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்-மார்க்சிஸ்டு அழைப்பு

Published On 2023-07-08 05:12 GMT   |   Update On 2023-07-08 05:12 GMT
  • அதிகார பீடத்தில் உள்ளவர்கள் நில வணிகர்கள் என்பதால் மோசடிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
  • விடுதலைக்கு பிறகு மாநில அரசிடம் இருந்த மொத்த அரசு புறம்போக்கு நிலங்கள், தற்போதுள்ள நிலங்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செய்லாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவில் சொத்து அபகரிப்பு வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மற்றும் அவனது மகன் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்ய போலீஸ்துறை தயக்கம் காட்டுகிறது. தற்போது பத்திர பதிவுத் துறையில் கடந்த 3 ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மாயமாகி உள்ளது.

இதனை அதிகார பின்புலம் இல்லாமல் செய்திட முடியாது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் ஆவணங்களை அரசு மீட்டெடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

நில மோசடியில் பொதுமக்கள் அளித்த புகார்கள் மீது அரசின் நடவடிக்கை விவரத்தை வெளியிட வேண்டும். அதிகார பீடத்தில் உள்ளவர்கள் நில வணிகர்கள் என்பதால் மோசடிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

எனவே மாநில முதல்வர் 2011 முதல் 2023 வரையில் பத்திரப்பதிவு துறையில் நடந்துள்ள மோசடிகள் குறித்தும், விடுதலைக்கு பிறகு மாநில அரசிடம் இருந்த மொத்த அரசு புறம்போக்கு நிலங்கள், தற்போதுள்ள நிலங்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

நடுத்தர மக்களின் சொத்துக்கள் பாதுகாக்க நிலமோசடிக்கு எதிரான உறுதியாக போராட மாநில மக்கள் முன் வரவேண்டும். வரும் 11-ந் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட்டு அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News