கோப்பு படம்.
கத்திரி வெயில் தொடக்கம் புதுவை மக்கள் அச்சம்
- மக்கள் பகல்நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கியிருந்தனர்.
- அக்னி நட்சத்திரம் தொடங்கியிருப்பது அவர்களை மேலும் அச்சப்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெப்பம் நிலவும். இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே கோடை வெயிலின் வெப்பம் அதிகமாக இருந்தது.
கடந்த மாதம் சில நாட்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவா னது. பகல்நேரங்களில் சாலைகளில் நடமாட முடியாத நிலை உருவானது. புதுவை மக்கள் பகல்நேரங்க ளில் வீடுகளுக்குள் முடங்கி யிருந்தனர்.
கடந்த வாரத்தில் அதிகாலையில் லேசான மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. அதேநேரத்தில் பகல் பொழு தில் வெயில் அடித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது. விடிய, விடிய கனமழை பெய்ததால் பூமி குளிர்ந்து வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.
அதன்பிறகு பெரியளவில் மழை இல்லை. அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் அதிக கோடை வெப்பத்தால் புதுவை மக்கள் பீதியடைந்திருந்தனர்.
தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கியி ருப்பது அவர்களை மேலும் அச்சப்படுத்தியுள்ளது.
இருப்பினும் குறைந்த அழுத்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது புதுவை மக்களுக்கு ஆறு தலை ஏற்படுத்தியுள்ளது.