புதுச்சேரி

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முதல் அமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளித்த காட்சி.

null

ஆதிதிராவிடர்கள் பாட்கோவில் பெற்ற கடனுக்கான வட்டி அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்

Published On 2023-09-29 11:29 IST   |   Update On 2023-09-29 11:32:00 IST
  • விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்
  • 15 ஆண்டுக்கு முன் கடன் பெற்றவர்கள் முன் அனுபவம் இல்லாத தால் தொழில்களை நடத்த முடியாமல் நலிவடைந்தனர்.

புதுச்சேரி:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ பொழிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆதிதிராவிடர், பழங்குடி யினர் மேம்பாட்டுக்கு மத்திய அரசு நிதி அமைச்சகம், தேசிய அட்டவணை வகுப்பினர் மேம்பாட்டுக்கழகம், தேசிய துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டுக்கழகம் மூலம் குறுகிய கால தொழில்கட ன்கள் வழங்கி வருகிறது. புதுவை ஆதி திராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டு கழகம் மூலம் 15 ஆண்டுக்கு முன் கடன் பெற்றவர்கள் முன் அனுபவம் இல்லாத தால் தொழில்களை நடத்த முடியாமல் நலிவடைந்தனர்.

அவர்களால் தொழில் கடனை திருப்பித்தர முடியாமல் மன உளைச்ச லோடு வாழ்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் 3 நிறுவனங்களின் மூலம் கடன் பெற்ற பயனாகளிகள், அசல் தொகையை செலுத்தினால் வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றி புதுவை முதல் அமைச்சரும் வட்டி, அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News