புதுச்சேரி

கோப்பு படம்.

சுற்றுப்புறத்தை அசுத்தம் செய்தால் அபராதம்

Published On 2023-04-11 11:06 IST   |   Update On 2023-04-11 11:06:00 IST
  • உழவர்கரை நகராட்சி, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
  • சாலையோ ரங்களிலும் பொதுமக்கள் மற்றும் வியாபார நிறுவனங்களால் குப்பைகள் கொட்ட ப்படு வது கள ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உழவர்கரை நகராட்சி, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் தினசரி உருவாகும் குப்பைகளை ஸ்வச்சதா கார்பரேஷன் நிறுவனத்தின் மூலம் வீடு மற்றும் வியாபார நிறுவனங்களுக்கே சென்று தினசரி குப்பை பெறப்படுகிறது.

இருப்பினும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் காலி மனைகளிலும், சாலையோ ரங்களிலும் பொதுமக்கள் மற்றும் வியாபார நிறுவனங்களால் குப்பைகள் கொட்ட ப்படு வது கள ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை சரிசெய்யும் பொருட்டு உழவர்கரை நகராட்சி தீவிர துப்புரவு பணியை மேற்கொண்டு வருகிறது. இதில் காலி மனை கள் மற்றும் தெருவோரம் கொட்டப்பட்டுள்ள குப் பைகள் முதற்கட்டமாக கண்டறியப்பட்டு அகற்றப் பட்டு வருகிறது.

எனவே தெருவோரம் மற்றும் காலி மனைகளில் குப்பைகளை போடுபவர்கள் அதனை உடனடியாக தவிர்த்து குப்பைகளை சேகரிக்க வருபவர்களிடம் கொடுக் குமாறு அறிவுறுத்தப்படுகி றது. மேலும் சாலையோர வியாபாரிகள் தங்களிடம் உருவாகும் குப்பைகளை குப்பைத்தொட்டிகள் அமைத்து சேகரித்து வியாபாரம் முடிந்த பின்னர் அருகில் இருக்கும் நகராட்சியின் குப்பை தொட்டியில் கொட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதனை பின்பற்றாமல் சுற்றுப்புறத்தை அசுத்தம் செய்பவர்கள் மீது கடு மையான நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும்.மேலும் தங்கள் பகு தியில் தினமும் குப்பை களை சேகரிக்க வாகனம், ஊழியர்கள் வரவில்லை என்றால் 18004255119 என்ற இலவச எண்ணில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News