புதுச்சேரி

பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருப்பதை படத்தில் காணலாம்.

மேம்பாலத்தில் வாகனங்கள் செல்வதால் பயணிகள் அவதி

Published On 2023-06-07 05:33 GMT   |   Update On 2023-06-07 05:33 GMT
  • சென்னை - நாகப்பட்டினம் புதுவை - விழுப் புரம் தேசிய நெடுஞ்சாலை யில் 4 வழி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது.
  • குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு உள்ளாகி பஸ்சில் பயணம் செய்து வருகிறார்கள்.

புதுச்சேரி:

சென்னை-நாகப்பட்டினம் புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை யில் 4 வழி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதில் 17 கிலோ மீட்டர் தூரத்திற்குள் முக்கிய கிராமங்களை இணைக்கும் பகுதியில் 5 மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து மாறி, மாறி செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருபுவனை யில் ஏரிக்கரை சாலையில் உள்ள பனை மரங்களை அகற்றாமல் மேம்பால பணிகள் முடிவடைந்து தற்போது, மேம்பாலத்தின் வழியாக புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.

இதனால் பாலம் தொடங்கும் இடத்திலிருந்து முடியும் இடம் வரை ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணிகள் நடந்து சென்று பாலத்தின் இறக்கத்தில் பஸ்சுக்காக காத்திருந்து பயணித்து வருகிறார்கள்.

இந்த பகுதிகளில் பயணியர் நிழற்குடையோ, நிழலுக்கு மரங்களோ இல்லை இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு உள்ளாகி பஸ்சில் பயணம் செய்து வருகிறார்கள்.

எனவே திருபுவனையில் பனைமர சாலையில் உள்ள பனை மரங்களை உடனடியாக அகற்றி அப்பகுதியில், சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

Similar News