புதுச்சேரி

கோப்பு படம்.

தேரின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-05-04 14:41 IST   |   Update On 2023-05-04 14:41:00 IST
  • திருக்காமீஸ்வரர் கோவில் நடைபெற்றது.
  • கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது.

புதுச்சேரி:

புதுவை வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது.

வரும் 15-ந் தேதி பிடாரியம்மனுக்கு காப்பு கட்டப்படுகிறது. 24-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. விழாவில் வரும் ஜூன் 1-ந் தேதி தேர் திருவிழா நடக்கிறது.

இதையொட்டி தேரின் உறுதி தன்மை குறித்து பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் சுந்தரராஜ், உதவி பொறியாளர் சீனுவாசன், பொறியாளர் குழுவினர் 3 தேர்களின் உறுதி தன்மை குறித்து ஆய்வு நடத்தினர்.

Tags:    

Similar News