கோப்பு படம்.
null
மின்துறையின் ஆக்கிரமிக்கப்பட்ட இடம் மீட்பு
- போலீஸ் பாதுகாப்புடன் நடவடிக்கை
- சுவரை இடித்து விட்டு, ஆக்கிரமிப்பு கும்பலால் இரும்பு கேட் போட்டுள்ளது
புதுச்சேரி:
காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தை ஒட்டியுள்ள மின்துறைக்கு சம்பந்தமான இடத்தை கடந்த மாதம் ஒரு கும்பல் ஆக்கிரமிப்பு செய்தது. இதனால் அந்த இடத்தை சுற்றி கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டு, இது மின்துறைக்கு சம்பந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இடத்தின் பக்கவாட்டில் உள்ள சுவரை இடித்து விட்டு, ஆக்கிரமிப்பு கும்பலால் இரும்பு கேட் போட்டுள்ளது. அரசு இடம் என அறிவிப்பு பலகை வைத்திருந்தும், ஆக்கிரமிப்பு கும்பல் அத்துமீறி பூட்டு போட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மின்துறை சார்பில் பெரிய கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள இரும்பு கேட்டை போலீசார் பாதுகாப்புடன் மின்துறை ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.