புதுச்சேரி

கோப்பு படம்.

பெண்களுக்கு அஞ்சலகத்தில் புதிய சேமிப்பு திட்டம் தொடக்கம்

Published On 2023-05-27 08:37 GMT   |   Update On 2023-05-27 08:37 GMT
  • 31-ந் தேதி வரை சிறப்பு முகாம்
  • மத்திய நிதி அமைச்சகம் மகளிர் மதிப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

புதுச்சேரி:

இந்திய அஞ்சால் துறையின் புதுவை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 மத்திய நிதி அமைச்சகம் மகளிர் மதிப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்ட சிறப்பு முகாம் அனைத்து அஞ்சல கங்களிலும் நடக்கிறது.

வரும் 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் எந்த ஒரு பெண்ணும், பெண்ணின் பாதுகாவலரும் கணக்கை தொடங்கலாம்.

ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படும். காலாண்டுக்கு ஒரு முறை வட்டி வரவு வைக்கப்படும். குறைந்தபட்சம் ரூ.1000 செலுத்தி கணக்கை தொடங்கலாம். தனிநபர் அதிகபட்ச வரம்பு ரூ.2 லட்சத்துக்கு உட்பட்டு எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் திறக்கலாம்.

கணக்கு தொடங்கிய நாளில் இருந்து ஒரு ஆண்டுக்கு பின் 40 சதவீதம் வரை திரும்ப பெறலாம்.

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், நிதி சுதந்திரத்தை மேம்படுத்தவும் அரசு மேற்கொண்டுள்ள சிறப்பு முயற்சியாகும்.

இந்த திட்டம் குறுகியகால முதலீட்டில் அதிக வருமானத்தை ஈட்டுவதால் பெண் முதலீட்டாளர்களிடம் வரவேற்பை பெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News