புதுச்சேரி
கோப்பு படம்.
- இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து திருடனை தேடி வந்தனர்.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை நெல்லித்தோப்பு கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் சாமுவேல். இவரின் பைக் திருட்டு போ னதால் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து திருடனை தேடி வந்தனர்.
விசாரணையில், வளவனூர் அம்பேத்கர் வீதியை சேர்ந்த தீபக்ராஜ்(39) இந்த பைக் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவரை நேற்று போலீசார் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், மூலக்குளம், வில்லியனூரில் மேலும் 2 பைக்குகளை திருடியதை ஒப்புக் கொண்டார். அந்த பைக்குகளையும் போலீசார் மீட்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.