கும்பாபிஷேக விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பகங்கேற்றனர்
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- தவளக்குப்பம் மாரியம்மன் கோயில் வீதியில் மாரியம்மன், காளியம்மன், பெருமாள் கோவில்கள் உள்ளது.
- மங்கள இசையுடன் தொடங்கி கணபதி பூஜை, நான்காம் கால பூஜையை தொடர்ந்து பூர்ணாஹூதி தீபாராதனை யாத்ராதனம் செய்து கலச பூஜை புறப்பாடு நடைபெற்றது.
புதுச்சேரி:
தவளக்குப்பம் மாரியம்மன் கோயில் வீதியில் மாரியம்மன், காளியம்மன், பெருமாள் கோவில்கள் உள்ளது.
இக்கோவில்கள் கும்பாபிஷேகம் காலை நடைபெற்றது, முன்னதாக மங்கள இசையுடன் தொடங்கி கணபதி பூஜை, நான்காம் கால பூஜையை தொடர்ந்து பூர்ணாஹூதி தீபாராதனை யாத்ராதனம் செய்து கலச பூஜை புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு கோவிலின் விமானத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மூலவர் மாரியம்மன், காளியம்மன், பெருமாள் கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது.
இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.