புதுச்சேரி

ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவனை நேரில் சந்தித்து  கென்னடி எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.

உப்பளம் தொகுதி இளைஞர்களுக்கு கடனுதவி

Published On 2023-05-30 13:56 IST   |   Update On 2023-05-30 13:56:00 IST
  • தொடர் நோய் பயனாளிகளுக்கு கடந்த 6 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படவில்லை.
  • சிறுகுளறுபடி காரணமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் உள்ள ஆதிதிராவிடர் தொடர் நோய் பயனாளிகளுக்கு கடந்த 6 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படவில்லை.

இது சம்பந்தமாக தொகுதி எம்.எல்.ஏ, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவனை நேரில் சந்தித்து பயனாளிகளுக்கு விரைவில் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். சிறுகுளறுபடி காரணமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

ஜூன் மாதத்திற்குள் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என இயக்குநர் உறுதி யளித்தார். இதனைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குநர் அசோக்கை நேரில் சந்தித்து பேசினார். அப்போது உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட சுய தொழில் தொடங்க இருக்கும் இளைஞர்களுக்கு கடனுதவி அளிப்பது சம்பந்தமாக அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் தன்மை குறித்து கேட்டறிந்தார்.

அதற்கு மேலாண் இயக்குநர், அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாகவும், பகுதி பகுதியாக கடன் அளிக்க இருப்பதாக தெரிவித்தார். அப்போது திமுக நிர்வாகிகள் இருதயராஜ். ராகேஷ், விஜயா, ஸ்ரீனிவாசன், சுகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News