புதுச்சேரி

 கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்த காட்சி.

கீழ்புத்துபட்டு பராசக்தி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-05-05 15:01 IST   |   Update On 2023-05-05 15:01:00 IST
  • கங்கா நகரில் அமைந்துள்ள பராசக்தி கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது.
  • இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை அனிச்சங்குப்பம் கங்கா நகரில் அமைந்துள்ள பராசக்தி கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை யொட்டி நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதில் புதுவை பா.ஜ.க மாநில தலைவர் சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக யாகசாலை பூஜையில் கலந்து கொண்டார். கும்பாபிஷேக பூஜைகள் நேற்றும் நடந்தது. தொடர்ந்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.

கணபதி ஹோமம் முடிந்தவுடன் அனுஷம் குப்பம் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து கோபுர கலசம், சூலம் ஆகியவை முளைப்பாரி ஊர்வலத்துடன் வேத மந்திரங்கள் முழங்க கொண்டுவரப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பராசக்தி கோவில் கும்பாபிஷேக விழாவில் புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதல-அமைச்சர் ரங்கசாமி மற்றும் புதுவை மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன் பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பக்தர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News