புதுச்சேரி

பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.

முத்துரத்தினம் அரங்க பள்ளியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

Published On 2023-05-28 05:00 GMT   |   Update On 2023-05-28 05:00 GMT
  • பிளஸ்-2 தேர்வில் மாணவி பிரியங்கா 600-க்கு 583 மதிப்பெண்ணும் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தை பிடித்தனர்.
  • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

புதுச்சேரி:

புதுவை கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்க மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றதோடு அதிக மதிப்பெண் பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவி ஹேமாவதி 500-க்கு 479 மதிப்பெண்ணும் , பிளஸ்-1 தேர்வில் மாணவன் வருண் 600-க்கு 539 மதிப்பெண்ணும் , பிளஸ்-2 தேர்வில் மாணவி பிரியங்கா 600-க்கு 583 மதிப்பெண்ணும் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தை பிடித்தனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன், புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜுரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன், பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

சாதாரண மாணவர்களையும் சாதனையாளர்களாக மாற்றக்கூடிய முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலை பள்ளியில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்-1 வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி கட்டண சலுகைகள் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News