புதுச்சேரி

கலைமாமணி விருது பெற்ற ராமதாஸ், பேராசிரியர் பாஞ்ச். ராமலிங்கம் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்ட காட்சி.

கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு பாராட்டு

Published On 2023-05-24 14:15 IST   |   Update On 2023-05-24 14:15:00 IST
  • புதுவை இலக்கிய சங்கம் சார்பில் இலக்கிய ஆர்வலர் சங்கமம் நிகழ்ச்சி தனியார் ஒட்டலில் நடைபெற்றது.
  • பேராசிரியர் பாஞ்ச்.ராமலிங்கம் வரவேற்றார்.

புதுச்சேரி:

புதுவை இலக்கிய சங்கம் சார்பில் இலக்கிய ஆர்வலர் சங்கமம் நிகழ்ச்சி தனியார் ஒட்டலில் நடைபெற்றது.

பேராசிரியர் பாஞ்ச்.ராமலிங்கம் வரவேற்றார். வணிகவரி துறை முன்னாள் தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.புதுவை இலக்கிய சங்கமம் தலைவர் ஆதி கேசவன் முன்னிலை வகித்தார்.

சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி தாவீது அன்னுசாமி மற்றும் ஆசிரியர் மகாலிங்க சிவம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

கலைமாமணி விருது பெற்ற ராமதாஸ, பேராசிரியர் பாஞ்ச். ராமலிங்கம் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கூட்டுறவு புத்தக சங்கம் தலைவர் சங்கரன், புதுச்சேரி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தாமோதரன், சுயநிதி தனியார் பள்ளிகள் கூட்ட–மைப்பு தலைவர் ரங்கநாதன், சுயநிதி தனியார் பள்ளி–களின் கூட்டமைப்பு செயலாளர் சிவராஜன், அங்காள பரமேஸ்வரி கலைக்குழு அமரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News