புதுச்சேரி

மடுகரை கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற்ற சித்திரை மாத தேரோட்டத்தை துணை சபநாயகர் ராஜவேலு தேரை வடம் பிடித்து இழுத்த காட்சி. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கூத்தாண்டவர் கோவில் தேர் பவனி

Published On 2023-05-10 12:07 IST   |   Update On 2023-05-10 12:07:00 IST
  • விழாவின் முக்கிய உற்சவமான கூத்தாண்டவர் ரத உற்சவம் நடந்தது.
  • குழந்தைவேலு, துணைத்தலைவர் செல்வகுமார், கிராம மக்கள் செய்துள்ளனர்.

புதுச்சேரி:

மடுகரை திரவுபதி அம்மன் கோவிலில் கூத்தாண்டவர் திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது.

கூத்தாண்டவர் திருக்கல்யாணம், பிரார்த்தனை தாலி கட்டும் நிகழ்ச்சிகள்  நடந்தது.

தொடர்ந்து விநாயகர், கிருஷ்ணர், பிடாரி அம்மன், மாரிய ம்மன், அர்ச்சுனன், திரவுபதி அம்மன், கூத்தாண்டவர் முத்து பல்லக்கில் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய உற்சவமான கூத்தாண்டவர் ரத உற்சவம்  நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.  சுவாமி, அம்மன் வீதியுலா நடக்கிறது.  கரக திருவிழாவும்,  மறுநாள் தீ மிதி திருவிழாவும் நடக்கிறது.

வருகிற 14-ந் தேதி பட்டா பிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் குழந்தைவேலு, துணைத்தலைவர் செல்வகுமார், கிராம மக்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News