கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான் மற்றும் அறங்காவல் குழுவினர் வடம் பிடித்து தொடங்கி வைத்த காட்சி.
- முன்னாள் எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான் பங்கேற்பு
- ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு தாலி கட்டிக் கொண்டனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் பகுதியில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25-ந் தேதி ஊரணி பொங்கல் படைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிலையில் கூத்தாண்டவர் சாமிக்கு திருக்கல்யாணமும் பக்தர்களுக்கு தாலி கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு தாலி கட்டிக் கொண்டனர்.
இதனிடையே திருநங்கைகளுக்கான அழகி போட்டி நடந்தது. போட்டியில் புதுவை, தமிழ்நாடு, ஆந்திரா, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
இதனை காண சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்தான் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து தொடங்கி வைத்தார். இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பட்டினை ஆலய அறங்காவல் குழு தலைவர் தரணிதரன், துணைத் தலைவர் பத்மநாபன், செயலாளர் முருகன், பொருளாளர் சிவராஜ், உறுப்பினர் நாகப்பன் உள்பட பிள்ளையார்குப்பம் கிராமவாசிகள், இளைஞர்கள் செய்திருந்தனர்.