கோப்பு படம்.
கருணாநிதி நூற்றாண்டு விழா ரத்து
- தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்
- சுதேசி மில் அருகில் இருந்து ஊர்வலமாக செல்வது ரத்து செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஒடிசாவில் ரெயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். இதேபோல புதுவையிலும் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒடிசா கோர ரெயில் விபத்து காரணமாக தலைவர் ஆணையின் படி புதுவை மாநில தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த கலைஞருடைய நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. சுதேசி மில் அருகில் இருந்து ஊர்வலமாக செல்வது ரத்து செய்யப்படுகிறது.
கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அண்ணா சிலை அருகில் அமைக்கப்பட்டிருக்கின்ற தலைவருடைய திருவுருவச் சிலைக்கு நேரடியாக வந்து மரியாதை செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. சென்னையில் நடைபெறும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கழக நிர்வாகிகள் சென்னை செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.