புதுச்சேரி

புதுவை என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி அரசினை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.

கர்நாடக காங். அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-01 10:51 IST   |   Update On 2023-10-01 10:51:00 IST
  • நாம் தமிழர் கட்சியின் தொகுதி நிர்வாகிகள் காமராஜ், நிர்மல்சிங், ப்ரியன்குமரன்,ராஜ்குமார், முத்துக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
  • தமிழகம், புதுவை மாநிலத்திற்கும் காவிரி பங்கீட்டு தண்ணீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசு.

புதுச்சேரி:

புதுவை நாம் தமிழர் கட்சியின் சார்பாக இந்திராகாந்தி சதுக்கம் நூறடி சாலையில்ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் இளங்கோவன் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவுரி நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் ரமேசு முன்னிலை வகித்தனர்.

நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை தலைவர் சேவியர் பெலிக்ஸ்,விழுப்புரம் மாவட்டம் கிழக்கு செயலாளர் தமிழ் இளைஞர் பாசறை தலைவர் செ.மணிபாரதி, குருதிகொடை பாசறை நிர்வாகிகள் அமுதன்பாலன் வேலவன், நாம் தமிழர் கட்சியின் தொகுதி நிர்வாகிகள் காமராஜ், நிர்மல்சிங், ப்ரியன்குமரன்,ராஜ்குமார், முத்துக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

தமிழகம், புதுவை மாநிலத்திற்கும் காவிரி பங்கீட்டு தண்ணீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசினை கண்டித்தும் காவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்ட திறனற்ற தமிழக திமுக அரசினை கண்டித்தும் புதுவை என்ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி அரசினை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

Similar News