புதுச்சேரி

காரைக்கால் வேளாண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்திபணி புறக்கணிப்பு போராட்டம்

Published On 2023-09-12 09:11 GMT   |   Update On 2023-09-12 09:11 GMT
  • நலசங்கம் சார்பில், பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
  • பி.சி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரியைக் கொண்டு நிரப்பவேண்டும்.

புதுச்சேரி:

காரைக்கால் மாவட்டத் தில் உள்ள, புதுச்சேரி அரசின் கூடுதல் வேளாண் துறையில், கடந்த பல ஆண்டுகளாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி வேளாண் பட்ட தாரி அலுவலர் நலசங்கம் சார்பில், பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் வேளாண் துறையில் பணிபுரியும் அதி காரிகளுக்கு, பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி, வேளாண் துறை முன்பு அதி காரிகள் உண்ணா விரதப் போராட்டம் நடத்தி னர். போராட்டத்தில், நீண்ட காலமாக பணிபுரியும் வேளாண் அலுவலர்களுக்கு உடனடியாக வேளாண் துறை துணை இயக்குனர் பதவி உயர்வு வழங்க வேண்டும். விவசாயத்துறை மற்றும் அதை சார்ந்த நிறு வனங்கள், துறைகளில் கூடுதல் இயக்குனர்கள், இணை பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

விவசாய அதிகாரி பதவிக்கு இன்றியமையாத தகுதியாக பி.எஸ்.சி அக்ரி பட்டத்தை சேர்த்து ஆட்சேர்ப்பு விதிகளை திருத்த வேண்டும். எந்த தாமதமும் இன்றி அனைத்து தொழிற்நுட்ப பதவிகளை யும் முறைபடுத்த வேண்டும். வேளாண்துறை உயர் அதிகாரி களுக்கு இடையே நிலவும் பனிப்போரை கருத்தில் கொண்டு வேளாண் இயக்குனர் பதவியை தகுந்த பி.சி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரியைக் கொண்டு நிரப்பவேண்டும்.

வேளாண்துறையில் உள்ள தொழிற்நுட்ப பணி யிடங்க ளின் பணியாளர் மதிப்பாய்வு மற்றும் மறு சீரமைப்பு மேற்கொள்ள வேண்டும். இணை வேளாண் இயக்குனர், கூடுதல் வேளாண் இயக்கு னர் மற்றும் வேளாண்துறை இயக்குனர்கள் ஆகியோரை புதுச்சேரி குடிமைப்ப ணி யில் (பி.சி.எஸ்) இணைத்திட வேண்டும். துறையில் உள்ள வேளாண் அலுவலர்களின் காலி பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும். கோரிக்கைகள் நிறை வேறாத பட்சத்தில் இன்று முதல் (12.9.23)தொடர் போராட்டம் நடைபெறும் என அதிகாரிகள் அறி வித்துள்ளனர். அதன்படி இன்று முதல் பணி புறக்க ணிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும், இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரி களுக்கு ஆதரவாக, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் ஆதர வை தெரிவித்து வருகின்ற னர்.

Tags:    

Similar News