புதுச்சேரி
கோப்பு படம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டு 16 மாதங்களாகியும் அடிக்கல் நாட்டவில்லை-முன்னாள் எம்.பி. ராமதாஸ் குற்றச்சாட்டு

Published On 2023-08-27 15:48 IST   |   Update On 2023-08-27 15:48:00 IST
  • ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை பட்டியலிட்டு, திட்டங்கள் தயாரித்து, நிதி ஒதுக்கி 1½ ஆண்டுகளுக்குள் செயல்படுத்தி இருக்கலாம்.
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கால அளவு ஓராண்டு நீட்டிக்கப்பட்டு ரூ. 950 கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை பட்டியலிட்டு, திட்டங்கள் தயாரித்து, நிதி ஒதுக்கி 1½ ஆண்டுகளுக்குள் செயல்படுத்தி இருக்கலாம். இந்த இழப்புக்கு யார் பொறுப்பேற்பது? மத்திய அரசு கொடுக்கும் நிதியை செலவழிக்காமலும், மக்க ளுக்கு வேண்டிய அடிப் படை வசதிகளை உருவாக் காமலும் இருப்பதற்காகவா இங்கே இரட்டை எஞ்சின் அரசு நடைபெறுகிறது?

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கால அளவு ஓராண்டு நீட்டிக்கப்பட்டு ரூ. 950 கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப் பட்டன.

ஸ்மார்ட் சிட்டி பணிக்கு ஒப்பந்தம் போட்டு 16 மாதங்கள் ஆகியும் இன்னும் இந்த திட்டங்களுக்கு அடிக் கல் கூட நாட்ட வில்லை.

ஒப்பந்தப்படி இத்திட்டங்களை செயல் படுத்த முடியாது என்று என்.பி.சி.சி. கூறியுள்ளதாக தெரிகிறது.

அந்த நிறுவனம் பணி செய்ய தயாராக இருந்தும் பூமி பூஜை போட்டு அனுமதி கொடுக்காததால் அந்த நிறுவனம் தன் பணியை தொடங்க முடிய வில்லை.

அனுமதி அளிக்க வேண்டும்

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் இதுபோல் சுணக்கம் இருக்கவே இல்லை. பிரச்ச னையின் தீவிரத்தை புரிந்து கொண்டு வளர்ச்சியை மனதில் கொண்டு இன்னும் 10 நாட்களுக்குள் திட்டங்க ளுக்கு அடிக்கல் நாட்டி ஒப்பந்ததாரர்கள் பணிகளைத் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News