புதுச்சேரி
கோப்பு படம்.
இந்திய பொது நிர்வாக நிறுவனத்தில் அரசு பணிக்கு விழிப்புணர்வு முகாம்
- கல்லூரி மாணவர்களுக்கு யூ.பி.எஸ்.சி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அரசு வேலை பெற பயிற்சி தொடங்கப்படுகிறது.
- மாணவர்கள் அடையாள அட்டை நகல், மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் 14-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம்.
புதுச்சேரி:
புதுவை இந்திய பொது நிர்வாக நிறுவன தலைவர் தனபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய தேர்வு ஆணையத்தின் போட்டி தேர்வுக்கு 15 ஆண்டாக புதுவை கிளை பயிற்சி அளிக்கிறது. இந்த ஆண்டு பிளஸ் 2, கல்லூரி மாணவர்களுக்கு யூ.பி.எஸ்.சி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அரசு வேலை பெற பயிற்சி தொடங்கப்படுகிறது.
இதில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் பயிற்சி விபரம் விளக்கம் பெற புதுவை ஏவேஷ் வீதியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவன கிளையில் வரும் 15-ந் தேதி காலை 10.30 மணிக்கு விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் அடையாள அட்டை நகல், மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் 14-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம்.
மேலும் விபரங்களுக்கு 0413 2222354, 9345009639 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.