புதுச்சேரி

கோப்பு படம்.

null

வருமான வரி ரீபண்ட் அளிப்பதாக மோசடி

Published On 2023-05-31 05:51 GMT   |   Update On 2023-05-31 05:54 GMT
  • சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
  • வங்கி அல்லது தனிப்பட்ட விபரங்களை அளிப்போரிடம் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2022-23-ம் ஆண்டுக்கான வருவான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான ஆன்லைன் வசதி கடந்தவாரம் தொடங்கியது. ஐ.டி.ஆர்.1, 4, படிவங்களை தாக்கல் செய்ய கடைசி நாளை அறிவித்துள்து. மோசடி பேர்வழிகள் சீசனுக்கு ஏற்றார்போல தங்களை அப்டேட் செய்துகொண்டு மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

தற்போது டேக்ஸ் ரீபண்ட் (வரி திரும்ப அளித்தல்) என்ற பெயரில் புதிய மோசடி ஈ.மெயில் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். அதில் போலி வருமான வரித்துறை இணையதள முகவரியை இணைக்கின்றனர். வங்கி அல்லது தனிப்பட்ட விபரங்களை அளிப்போரிடம் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பாதுகாப்பு பிரிவு தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளது. இது போன்ற மோசடிகள் குறித்த தகவல்கள் கிடைத்தால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News