புதுச்சேரி
கென்னடி எம்.எல்.ஏ. மீனவர்களுக்கு உதவி தொகை பெற அடையாள அட்டை வழங்கிய காட்சி.
மீனவர்களுக்கு உதவி தொகை பெற அடையாள அட்டை
- கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
- கிளை செயலாளர் ராகேஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் செல்லப்பன், ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் உப்பளம் தொகுதியை சேர்ந்த மீனவர் மற்றும் முதியவர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள அட்டையை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்ட மீனவ முதியவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அதிகாரி அய்யனார், தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், பொருளாளர் மணிமாறன், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர் ராகேஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் செல்லப்பன், ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்