புதுச்சேரி

கோப்பு படம்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் கமிட்டி-அ.தி.மு.க. கோரிக்கை

Published On 2023-07-07 10:51 IST   |   Update On 2023-07-07 10:51:00 IST
  • குற்றவாளிகள் யாராக இருந்தா லும் பாரபட்சமற்ற முறை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • கவர்னர்கள் அரசியல் செய்யக் கூடாது என்பது அ.தி.மு.க.வின் நிலைபாடு.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை காமாட்சியம்மன் கோவில் நில அபகரிப்பில் தி.மு.க. அமைப்பாளர் சிவா சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது சி.பி.ஐ. விசாரணை தேவை என கூறியுள்ளார்.

ஆனால் தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் எம்.எல்.ஏ. குற்றவாளிகளுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஜாமீன் பெற்றுள்ளார். இது தி.மு.க.வின் இரட்டை வேடம்.

நிலம் காமாட்சியம்மன் கோவில் சொத்து தானா.? என்பதை அரசு தெளிவு படுத்த வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தா லும் பாரபட்சமற்ற முறை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவை மாநிலத்தில் உள்ள கோவில் சொத்துக்களை பாதுகாக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் கமிட்டி அமைக்க வேண்டும்.

கோவில் சொத்துக்கள் குறித்த விளக்க குறிப்பேட்டை அரசு வெளியிட வேண்டும். காமாட்சியம்மன் கோவில் நில பிரச்சினையில் கோடி களில் பந்தயம் கட்டு பவர்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது.? என அமலா க்கத்துறை விசாரணை நடத்த வேண்டும்.

கவர்னர்கள் அரசியல் செய்யக் கூடாது என்பது அ.தி.மு.க.வின் நிலைபாடு. தமிழகத்தில் கடந்த 26 மாதகால தி.மு.க. ஆட்சியின் செயல்படாத தன்மை, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, அமைச்சர்களின் குற்றப்பின்னணி செயல்பாடுகள் போன்ற வற்றை மூடி மறைக்க தமிழக கவர்னரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News