கோப்பு படம்.
காமராஜர் மணிமண்டபம் அருகில் சுகாதார திருவிழா
- சிறுநீரக நோயிற்கான பரிசோதனை மற்றம் ஆலோசனைகள் அந்தந்த துறை சார்ந்த சிறப்பு வல்லுநர்களால் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
- னைவருக்கும் ஆரோக்கிய நல்வாழ்வு என்ற கருப்பொருளில் நடைபெறும்.
புதுச்சேரி:
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சுகாதார திருவிழா 4-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
புதுவை கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம் சிவாஜி சிலை அருகில் நண்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை சுகாதாரத் திருவிழா நடக்கிறது. இதில் பொது சுகாதார சேவைகள், வாய், மார்பக, கர்ப்பவாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் ஆலோசனை, நீரிழிவு, ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், குழந்தைகளுக்கான ஆலோசனை, இருதயம், நுரையீரல், நரம்பியல், சிறுநீரக நோயிற்கான பரிசோதனை மற்றம் ஆலோசனைகள் அந்தந்த துறை சார்ந்த சிறப்பு வல்லுநர்களால் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
மேலும், சுகாதார கண்காட்சி, ஆயுஷ் மற்றும் யோகா உடல் பயிற்சி முறை, ஆரோக்கிய உணவு திருவிழாவும் நடைபெறுகிறது. அனைவருக்கும் ஆரோக்கிய நல்வாழ்வு என்ற கருப்பொருளில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.