புதுச்சேரி

கோப்பு படம்.

முதல்- அமைச்சர் ரங்கசாமி மேதின வாழ்த்து

Published On 2023-04-30 13:51 IST   |   Update On 2023-04-30 13:51:00 IST
  • உலக இயக்கத்தின் உந்துசக்தியாக விளங்குபவர்கள் உழைப்பாளர்கள்.
  • மே மாதம் முதல் நாள் உழைப்பாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள மேதின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

புதுவை மக்கள் அனைவருக்கும் குறிப்பாக உழைக்கும் மக்கள் அனைவருக்கும் எனது உழைப்பாளர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலக இயக்கத்தின் உந்துசக்தியாக விளங்கு பவர்கள் உழைப்பா ளர்கள்.

அவர்களின் உழைப்பாலேயே உலகம் நிலைபெற்றிருக்கிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த உழைப்பாளர்களின் மேன்மையைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் முதல் நாள் உழைப்பாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

உழைப்பால் வீட்டையும் நாட்டையும்உயர்த்தும் அனைத்துத் தொழிலா ளர்களின் நலனில் எங்கள் அரசுஎப்போதும் தனிக் கவனம் கொண்டுள்ளது. அவர்களது வளமான வாழ்வுக்கு உத்தரவாதம் தரும் அரசாக எங்கள் அரசு என்றும் தொடரும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்ப ட்டுள்ளேன்.

இந்த மே தினமானது மனிதகுலத்தின் மேன்மை க்காகவும், நாட்டின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும், வலிமை க்காகவும் அயராது பாடுபடும் தொழிலாளர்களிடையே ஒற்று மையையும்,அவர்களது வாழ்வில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்து சேர்ப்பதாக அமையட்டும் என்று கூறி, அனைவருக்கும் எனது உளம்கனிந்த மேதின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பி னர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது மே தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News