புதுச்சேரி

கவர்னர் மாளிகையில் நடந்த திறன் அறிதல் நிகழ்ச்சியில் தனிதிறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை கவர்னர் தமிழிசை பாராட்டிய காட்சி.

மன அழுத்தத்தை போக்க குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்: கவர்னர் தமிழிசை

Published On 2023-09-21 09:29 IST   |   Update On 2023-09-21 09:29:00 IST
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமையை வெளிக்கொண்டு வர உதவி செய்வது என் வாழ்க்கையில் மிகப் பெரிய பேராக அமையும்.
  • மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு பயிற்சி வழங்கப்படும்.

புதுச்சேரி:

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கான "திறன் அறிதல்" நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கவர்னர் தமிழசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் 10 பேர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை தனித்தனியாக வெளிப்படுத்தினர்.

இதில் பரத நாட்டியம், சிலம்பாட்டம், குரலிசை, வாத்திய இசை, கழிவுப் பொருட்களில் இருந்து கலைப்பொருட்கள் செய்வது, அறிவியல் செய்முறைகள் போன்ற திறமைகளை நிகழ்த்திக் காட்டினர்.

இதனை பார்த்து மகிழ்சியடைந்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமையை வெளிக்கொண்டு வர உதவி செய்வது என் வாழ்க்கையில் மிகப் பெரிய பேராக அமையும்.

குழந்தைகளின் உடல் நலம் போலவே மனநலமும் பாதிக்கப்படுகிறது. மன அழுத்தத்தை போக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.

மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு பயிற்சி வழங்கப்படும். இதற்கு கவர்னர் மாளிகை மாணவர்களுக்கு உதவி செய்யும்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.

Tags:    

Similar News