புதுச்சேரி

கோப்பு படம்.

பிளஸ்-2 தேர்ச்சி குறைவுக்குஅரசின் அலட்சியமே காரணம்

Published On 2023-05-10 11:59 IST   |   Update On 2023-05-10 11:59:00 IST
  • பா.ஜனதா அரசு சிறிதும் அக்கறையின்றி தான்தோன்றிதமாக அலட்சியமாக நடந்து கொள்கிறது.
  • காலி பணியிடங்களை கல்வியாண்டு தொடங்கும் முன் நிரப்ப வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை பிரதேச மார்க்சிஸ்ட்டு கட்சியின் செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட 6.58 சதவீத மாணவர்கள் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை அரசு கல்வித்துறையின் செயல்பாடுகள் படிப்படியாக அதலபாதாளத்தில் சென்று கொண்டே இருக்கிறது. பாட புத்தகம் வழங்குவது, சீருடை வழங்குவது, ஆசிரியர் பற்றாக்குறை, மதிய உணவு உட்பட அனைத்து விஷயத்திலும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசு சிறிதும் அக்கறையின்றி தான்தோன்றிதமாக அலட்சியமாக நடந்து கொள்கிறது.

அரசு பள்ளிகளின் முன்னேற்றம், மாணவர்களின் நலனில் அரசுக்கு சிறிதளவும் அக்கறை இல்லை. தனியார் பள்ளி முதலாளிகளுக்கு சாதகமாக அரசு பள்ளிகளை அழிக்கும் வேலை நடந்து வருகிறது.

அரசு பள்ளிகள் மீது முதல்- அமைச்சருக்கு அக்கறை இருந்தால், அரசு பள்ளி உள்கட்டமைப்பை முழு ஆய்வு செய்ய வேண்டும். காலி பணியிடங்களை கல்வியாண்டு தொடங்கும் முன் நிரப்ப வேண்டும்.

தான்தோன்றித்தனமான சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை நிறுத்த வேண்டும். கல்வித்துறை நிர்வாக குறைபாடுகளை களைய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News