புதுச்சேரி

தி.புதுக்குப்பத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்ற வரும் காட்சி. 

விநாயகர் சிலை தயாரிப்பு பணி மும்முரம்

Published On 2023-09-15 05:18 GMT   |   Update On 2023-09-15 05:18 GMT
  • ரூ.6 ஆயிரம் விலையிலும் அதிலிருந்து படிப்படியாக உயர்ந்து 16 அடி விநாயகர் சிலை ரூ.60 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
  • விலை அதிகரித்ததன் காரணமாக வியாபாரம் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரி:

திருக்கனூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருக்கனூரை அடுத்த தமிழக பகுதியான தி.புதுக்குப்பத்தில் பல்வேறு உயரங்களிலும் பல வண்ணங்களிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

3 அடி முதல் 16 அடி வரை விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. 3 அடி விநாயகர் சிலை ரூ.6 ஆயிரம் விலையிலும் அதிலிருந்து படிப்படியாக உயர்ந்து 16 அடி விநாயகர் சிலை ரூ.60 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மரவள்ளி கிழங்கு கூழ், பேப்பர் மாவு, கலர் மாவு, சிமெண்டு பேப்பர் பை உள்ளிட்ட பொருட்களால் தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய வகையில் விநாயகர் சிலைகள் இங்கு தயாரிக்கப்படுகிறது.

மூல பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் சிமெண்டு பை விலை அதிகரிப்பால் விநாயகர் சிலை தயாரிப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவுக்கு முன்பு ரூ.1500-க்கு விற்கப்பட்ட 3 அடி விநாயகர் சிலை தற்போது ரூ.6 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

விலை அதிகரித்ததன் காரணமாக வியாபாரம் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

விநாயகர் சதுர்த்திக்கு குறைந்த நாட்களே இருப்பதால் இனி வரும் காலங்களில் விற்பனை சூடு பிடிக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags:    

Similar News