புதுச்சேரி

கோப்பு படம்.

பிரதமரின் டயாலிசிஸ் திட்டத்தை நடைமுறைபடுத்த நிதி ஆதாரம்

Published On 2023-05-21 12:05 IST   |   Update On 2023-05-21 12:05:00 IST
  • கவர்னர் தலைமையில் ஆலோசனை
  • இந்த திட்டத்திற்கான நிதி ஆதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

புதுச்சேரி:

பிரதமரின் டயாலிசிஸ் திட்டத்தை புதுவை மாநிலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, சுகாதாரத்துறைச் செயலர் உதயகுமார், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு, துணை இயக்குநர் அனந்தலட்சுமி, தலைமை மருந்தக அதிகாரி ரமேஷ், குஜராத் ஐ.கே.டி.ஆர்.சி நிறுவனத்தின் இயக்குநர் தலைமையிலான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தற்போது புதுவையில் உள்ள டயாலிசிஸ் சிகிச்சை மையங்களின் செயல்பாடு, டயாலிசிஸ் மையங்களில் உள்ள தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துதல், அவற்றின் அமைவிடம் ஆகியவற்றை முறைப்படுத்துதல், மனிதவளம், தொழில்நுட்ப வசதிகளை அதிகரித்தல், குஜராத்தைச் சேரந்தை ஐ.கே.டி.ஆர்.சி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக் கூறுகள், இணைய வழி சிகிச்சை முறையை அறிமுகப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்தல், பாரதப் பிரதமிரின் டயாலிசிஸ் திட்டச் செயல்பாட்டை துரிதப்படுத்துதல், இந்த திட்டத்திற்கான நிதி ஆதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

Tags:    

Similar News