புதுச்சேரி

கோப்பு படம்.

null

நண்பரிடம் நகையை திருடி அடகு வைத்து மோசடி

Published On 2023-06-14 08:18 GMT   |   Update On 2023-06-14 08:18 GMT
  • வியாபாரியிடம் விசாரணை
  • இதற்கிடையே நாராயணசாமியிடம் கடை வியாபாரத்துக்காக இளைய ராஜா ஒரு லட்சம் கடன் வாங்கினார்.

புதுச்சேரி:

புதுவை நெல்லித்தோப்பு அருள்படையாட்சி வீதியை சேர்ந்தவர் நாராயணசாமி. டைலர் கடை நடத்தி வருகிறார்.

இவரிடம் நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்த இளையராஜா என்பவர் நண்பராக பழகி வந்தார். இளைய ராஜா நெல்லித்தோப்பு செயின்ட் அந்துவான் வீதியில் கார்மெண்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். இதற்கிடையே நாராயணசாமியிடம் கடை வியாபாரத்துக்காக இளைய ராஜா ஒரு லட்சம் கடன் வாங்கினார்.

ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு நாராயணசாமியின் டைலர் கடைக்கு வந்த இளையராஜா அவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கடையின் மேஜை டிராயரில் வைத்திருந்த அரை பவுன் நகையை இளையராஜா திருடிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த நாராயணசாமி இளையராஜாவிடம் கேட்ட போது நகை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். அவர் அந்த நகையை வேறு பெயரில் அடகு வைத்திருப்பதாக தெரிவித்தார். பின்னர் நகை அடகு வைத்த ரசீதை நாராயணசாமியிடம் இளைய ராஜா கொடுத்தார். அதன் பிறகு இளையராஜா தலைமறைவாகிவிட்டார்.

இது பற்றி இளையராஜாவின் மனைவி தேவியிடம் நாராயணசாமி கேட்ட போது அவர் அடவாடியாக பேசினார். இதையடுத்து நாராயணசாமி தன்னிடம் ஒரு லட்சம் கடன் வாங்கி விட்டு நகையை திருடி வேறு பெயரில் அடகு வைத்து மோசடி செய்த இளையராஜா மீது உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News