கோப்பு படம்.
- திருவண்ணா மலையை சேர்ந்த கேசவன் என்பவரு டன் 3 லாரிக்கான விலையை பேசியுள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து புருஷோத்தனை தேடிவருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை தட்டாஞ்சாவடி குண்டுப்பாளையம் நவசக்தி நகர் முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் புருஷோத்தமன். லாரி உரிமையாளர். இவருக்கு திலகவதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
புருஷோத்தமன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இதனையடுத்து அவரது மனைவி திலகவதி மற்றும் பிள்ளைகளால் லாரியை பராமரிக்க முடியாததால் அதனை விற்பனை செய்ய முடிவு செய்தனர். திருவண்ணா மலையை சேர்ந்த கேசவன் என்பவரு டன் 3 லாரிக்கான விலையை பேசியுள்ளனர்.
ரூ,42 லட்சத்து 75 ஆயிரம் தொகையை 3 மாதத்திற்குள் தருவது என முடிவு செய்து, ரூ.1 லட்சம் முன் பணமாக பெற்றுக்கொண்டு 3 லாரிகளும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் 3 மாதத்திற்குள் புருஷோத்தமனால் பணத்தை கொடுக்க முடியவில்லை. இதனையடுத்து லாரிகளை மாத வாடகைக்கு எடுத்து ெகாள்வது என முடிவு செய்துள்ளார்.
அதன்படி ஒவ்வொரு லாரி க்கும் மாதம் ரூ 30 ஆயிரம் வாடகை கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த லாரி வாடகை யையும் அவர் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து கோரிமேடு போலீசில் திலகவதி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செயது புருஷோத்தனை தேடிவருகின்றனர்.