விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
புதுவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நாடு முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது
- புதுவை சுதேசி மில் அருகே ஐக்கிய முன்னணி சார்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி:
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நாடு முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. புதுவை சுதேசி மில் அருகே ஐக்கிய முன்னணி சார்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மாசிலாமணி, கீதநாதன், ரவி, புருஷோத்த மன், சாந்தகுமார், கலியமூர்த்தி தலைமை வகித்தனர். ராஜா, முருகன், பெருமாள், ராமமூர்த்தி, தாமோதரன், கருணாகரன், பிரகாஷ், கண்ணன், ஆறுமுகம், முருகையன், ஆனந்தன், நாராயணன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம் தொடங்கி வைத்தார்.
விவசாயிகளின் கடனிலிருந்து விடுதலை அளிக்க வேண்டும். விவசாய போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். போராட்டத்தின்போது தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
2020 மின்கட்டண சட்ட முன்வடிவை திரும்பப்பெற வேண்டும். விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கைவினைஞர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். விரிவான பயிர்காப்பீடு திட்டம் கொண்டுவர வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் இயற்ற வேண்டும். லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும்.
பாசிக், பாப்ஸ்கோ ஊழியர்களின் நிலுவை சம்பளத்தை உடனே வழங்கி நிர்வாகத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.