எம்.ஐ.டி. கல்லூரியில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இடிசி ஒருங்கிணைப்பாளர் வைத்தீஸ்வரன் பேசினார்.
எம்.ஐ.டி.கல்லூரியில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
- எம்.ஐ.டி. கல்லூரியில் எம்.எஸ்.எம்.இ. திட்டங்கள் மற்றும் ஜெம் போர்டல் என்ற தலைப்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- கல்லூரி இ.டி.சி. ஒருங்கிணைப்பாளர் வைத்தீஸ்வரன் வரவேற்றார்.
புதுச்சேரி:
புதுவை மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு சார்பில் எம்.எஸ்.எம்.இ. திட்டங்கள் மற்றும் ஜெம் போர்டல் என்ற தலைப்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மணக்குள விநாயகர் கல்விக்குழும தலைவரும், நிர்வாக இயக்குநருமான தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மற்றும் கல்லூரி முதல்வர் மலர்க்கண் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கல்லூரி இ.டி.சி. ஒருங்கிணைப்பாளர் வைத்தீஸ்வரன் வரவேற்றார். மேலாண்மை துறைதலைவர் பாஸ்கரன் தலைமை விருந்தினரை கவுரவித்தார்.
முதன்மை விருந்தினராக எம்.எஸ்.எம்.இ. இணை இயக்குநர் தர்ம செல்வன் கலந்துகொண்டு தொழில் முனைவோருக்கு பயனுள்ள தகவல்களையும் நுண்ணறிவுகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் லகு உத்யோக் பாரதி புதுவை மாநில பொதுச் செயலாளர் வேலுச்சாமி வேலுசாமி, தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டிற்காக எம்.எஸ்.எம்.இ. வழங்கும் பல்வேறு பயிற்சி திட்டங் களை பற்றி தெரிவித்தார். இ.சி.இ.துறை பேராசிரியர் ராஜேஷ் நன்றி கூறினார்.
கல்லூரியின் இ.டி. செயல் பேராசிரியர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.