புதுச்சேரி

கோப்பு படம்

சுண்ணாம்பாறு படகு குழாமை சீரமைக்க வலியுறுத்தல்

Published On 2023-05-05 14:49 IST   |   Update On 2023-05-05 14:49:00 IST
  • சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக உள்ளது.
  • கடந்த 7 மாதமாக பராமரிப்பு ஏதுமின்றி இயக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி:

மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெக–நாதன் கவர்னர், முதல்-அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரி–களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுவை சுண்ணாம்பாறு படகு குழாம் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக உள்ளது. இங்குள்ள படகுகளும், எந்திரங்களும், கடந்த 7 மாதமாக பராமரிப்பு ஏதுமின்றி இயக்கப்பட்டு வருகிறது. 8 படகுகள் எந்திரங்கள் சரி இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய படகுகள் மற்றும் இயந்திரங்கள் எதையும் வாங்காமல் நிர்வாகம் செயலிழந்துள்ளது. பயணிகள் பயன்படுத்தும் கழிப்பிடங்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. படகு சவாரி செய்யும் பயணிகள் பேரடைஸ் கடற்கரை செல்கின்றனர். அங்கு பொதுழுதுபோக்கு அம்சங்கள் நிறுத்தப்பட்டு–உள்ளது.

உணவகங்களின் மேற்கூரை சேதமான நிலையில் உள்ளது. சுண்ணாம்பாறு படகு குழாம் மற்றும் பேரடைஸ் கடற்கரை பகுதிகளை சுற்றுலா வளர்ச்சி கழகமே பராமரிக்க வேண்டும். தனியாருக்கு தாரை வார்க்கும் சதி திட்டத்தை கைவிட வேண்டும். சுண்ணாம்பாறு படகு குழாம் மற்றும் பேரடைஸ் கடற்கரை பகுதிகளை மறு சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News