புதுச்சேரி

கோப்பு படம்.

தி.மு.க. வலியுறுத்தல்

Published On 2022-10-26 10:05 IST   |   Update On 2022-10-26 10:05:00 IST
  • புதுவை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள ப்படுவதில்லை.
  • இதனால் அரசு பொது மருத்துவமனைக்கு இதய வலியுடன் வரும் நோயாளிகள் ஜிப்மர் மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள ப்படுவதில்லை. ஆஞ்சியோ எந்திரம் பழுதடைந்ததால் புதியதாக ஆஞ்சியோ எந்திரம் அமைக்கும் பணி மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆஞ்சியோ எந்திரத்தை தொடர்ச்சியாக இயங்க செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காதது அரசின் அலட்சிய போக்கை காட்டுகிறது.

இதனால் அரசு பொது மருத்துவமனைக்கு இதய வலியுடன் வரும் நோயாளிகள் ஜிப்மர் மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். ஜிப்மருக்கு ஏற்கனவே ஏராளமான நோயாளிகள் செல்கின்றனர். மேலும் புதுவை நோயாளிகளுக்கு ஜிப்மரில் முறையாக சிகிச்சை அளிக்கவும் முன்வருவதில்லை.

இதனால் இதய வலி ஏற்பட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு செல்பவர்கள் மேலும் பாதிப்பிற்கு உள்ளா கின்றனர். மேலும் ஆரம்ப கட்டத்தில் குணப்படுத்தும் ஆஞ்சியோ சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் சிறிய அளவில் இருதய நோய் பாதிப்பில் உள்ளான வர்கள் பெரிய அளவில் பாதிப்பிற்கு செல்லும் அபாய நிலையும் உள்ளது.

எனவே புதுவை அரசு பொது மருத்துவமனையில் உடனடியாக ஆஞ்சியோ சிகிச்சை எந்திரத்தை நிறுவி, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மேலும் அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோ எந்திரம் பொருத்தும் வரை இதய நோய் சிகிச்சை தேவைப்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு வரும் இதய நோயாளிகளுக்கு உடனடியாக தனியார் மருத்துவமனைகளில் ஆஞ்சியோ சிகிச்சை கிடைக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News