புதுச்சேரி

திருக்கல்யாண உற்சவம் நடந்த  போது எடுத்த படம்.

திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா

Published On 2023-05-30 14:09 IST   |   Update On 2023-05-30 14:09:00 IST
  • திருக்கனுாரை அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன், செல்வ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
  • இக்கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதுச்சேரி:

திருக்கனுாரை அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன், செல்வ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு சிறப்பு மின் அலங்காரத்தில் சாமி வீதியுலா நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 26-ந் தேதி முத்து மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம் நடந்தது. கடந்த 28-ந் தேதி திரவுபதியம்மன், அர்ஜூனன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பின்னர் அன்ன தானம் வழங்கப்பட்டது.

இரவு 9 மணிக்கு முத்து பல்லக்கில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. இன்று 30-ம் தேதி மாலை 6 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News